இப்சூர் ரகுமான் சியோகார்வி
இப்சூர் ரகுமான் சியோகார்வி Hifzur Rahman Seoharwi | |
---|---|
பதவியில் 1952–1962 | |
தொகுதி | அம்ரோகா |
முதலாவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
இரண்டாவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1900 சியோகாராம் பிஜ்னோர் மாவட்டம் |
இறப்பு | 2 ஆகத்து 1962 | (அகவை 61–62)
இளைப்பாறுமிடம் | முன்கதியான், புது தில்லி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | மத்ரசா சாகி, மொராதாபாத், தாருல் உலூம் தேவ்பந்த் |
இப்சூர் ரகுமான் சியோகார்வி (Hifzur Rahman Seoharwi, 1900 - 1962 ஆகஸ்ட் 2) ஓர் இந்திய இஸ்லாமிய அறிஞர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் செயல்பாட்டாளர் ஆவார். இவர் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக 25 ஆண்டுகள் (1922-1947) போராடிநார். இதற்காக எட்டு ஆண்டுகள் தனது வாழ்வை சிறையில் கழித்தார். [1] இவர் இந்தியாவைப் பிரிப்பதை கடுமையாக எதிர்த்தார். [2] மேலும் 1952 முதல் 1962 வரை அம்ரோஹா (மக்களவைத் தொகுதி)யிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [3] [4]
பிறப்பு மற்றும் கல்வி
[தொகு]ரஹ்மான் 1900 ஆம் ஆண்டு பிறந்தார் (1318 இஸ்லாமிய ஆண்டு). இவரது குடும்பம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சியோகராவை சேர்ந்த ஜமீன்தார் குடும்பமாகும். சியோகரா ஒரு நகரகும். இது உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[5] இவரது தந்தை ஹாஜி சம்சுதீன் போபால் மாநிலத்திலும் பின்னர் பிகானேர் மாநிலத்திலும் உதவி பொறியாளராக வேலை செய்தார். ரஹ்மான் ஆரம்பத்தில் வீட்டுப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் முரதாபாத்தில் உள்ள மதரஸா சாஹியில் சேர்ந்தார்.
ரஹ்மான் தனது நிறைவு பாடமான தார்ஸ்-இ-நிஜாமியை மதரஸா ஃபைஸ்-இ-ஆம் யில் முடித்தார். அங்கு அப்துல் கபூர் சியோஹார்வி, அஹ்மத் சிஷ்டி மற்றும் சையித் அப்தாப் அலி ஆகியோரின் கீழ் இவர் படித்தார். பின்னர் 1922 ஆம் ஆண்டில், தாருல் உலூம் தேவ்பந்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு அன்வர் ஷா காஷ்மீரியின் கீழ் ஹதீத்தில் நிபுணத்துவம் பெற்றார் மற்றும் 1923 இல் (1342 இஸ்லாமிய ஆண்டு) பட்டம் பெற்றார்.
இலக்கியப் படைப்புகள்
[தொகு]- அக்லக் அவுர் ஃபல்சாஃபா-இ-அக்லக்
- ஆசாதி: புன்யாடி இன்சானி ஹக் [6]
- பாலாக்-இ-முபீன் [7]
- ஹுகுமத் கா தீனி தசவ்வூர் [8]
- ஃபார்ட் அவுர் இஜ்திமாயத் [9]
- இஸ்லாம் கா இக்தேசி நிஜாம் [10]
- கசாஸ் அல்-குர்ஆன் [11] [12]
- குர்ஆனி உசூல்-இ-மாஷியாத் [13]
- ரசூல்-இ-கரீம்
- சீரத்-இ-நப்வி கி ஸாருரத் வா அஹ்மியாத் [14]
- வக்த் கி காத்ர்-ஓ-கெய்மத் [15]
இறப்பு
[தொகு]சியோஹார்வி புற்றுநோயால் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 அன்று இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்திற்கு தாருல் உலூம் தேவ்பந்த்தின் முதல்வர் காரி முஹம்மது தயிப் தலைமை தாங்கினார். முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அமைச்சர்கள் மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். மேலும் இவரது இறுதி ஊர்வலத்திற்கு இரண்டு இலட்ச மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்துக்கொண்டனர்.
இவரது அடக்க தளம் புது தில்லியின் முன்ஹதியனில் அமைந்துள்ளது, அங்கு தான் ஷா வலியுல்லாஹ் தெஹ்லவியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.[5] இவரது நினைவாக ஜித்தாவில் இவரது பெயரில் அகாடமி நிறுவப்பட்டுள்ளது. [16] [17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maulana Hifzur Rahman and his Qasas-ul-Qur'an". www.arabnews.com. பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
- ↑ Aruna Asaf Ali: A Compassionate Radical.
- ↑ "Can BJP reverse the trend in slippery Amroha? - Times of India". The Times of India.
- ↑ "ENTRANCEINDIA | Maulana Mohammad Hifzur Rahman MP biodata Amroha | ENTRANCEINDIA". www.entranceindia.com.
- ↑ 5.0 5.1 Rizwi, Syed Mehboob, Tarikh Darul Uloom Deoband, vol. 2, தேவபந்து: Darul Uloom Deoband, p. 107-109
{{citation}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ Azadi: Bunyadi Insani Haq (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ Balagh-e-Mubeen. பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
- ↑ Hukumat Ka Deeni Tasawwur (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ Fard aur Ijtima'iyat (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ Islam ka iqtesadi nizam. பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
- ↑ Qasas al-Quran (Volume 1-2) (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
- ↑ Qasas al-Quran (Volume 3-4). பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
- ↑ Qur'ani Usool-e-Ma'ashiyaat (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ Seerat-e-Nabwi ki Zarurat wa Ahmiyyat (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ Waqt ki Qadr-o-Qeemat (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ "Hifzur Rahman Academy gives souvenirs to pilgrims". SaudiGazette.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ "Hifzur Rehman Academy honors new Muslims in Jeddah". ArabNews.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.